முடக்கப்பட்ட பெண்ணின் சொத்துக்கள் ; தீவிரமாகும் விசாரணை
அங்கொடை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சொத்துகளை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றவரும்படி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
களனிமுல்ல வடக்கு, அங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை ஈட்டியுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குற்ற வரும்படி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேலதிக விசாரணை
இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு, சந்தேக நபரான பெண் மற்றும் அவரது நெருங்கிய சகா ஒருவரின் பெயரில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு முச்சக்கரவண்டிகள், குறித்த பெண்ணின் மகனின் பெயரில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து, குறித்த சொத்துக்களை எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவம் குறித்து குற்றவரும்படி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.