பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் பிரியங்கா.....உருவாகும் புதிய கூட்டணி
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வீட்டில் தற்போது கூட்டணிகள் உருவாகி வருகின்றன. முன்னதாக இந்த வீட்டில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூபி ஆகியோர் கூட்டணி அமைத்து ஒன்றாக இருந்து வந்தனர். அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டதும் கூட்டணியில் விரிசல் விழுந்தது.
இந்த நிலையில் தற்போது பிரியங்கா இல்லாமல் புதிய கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது. இந்த கூட்டணியின் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அதற்குள் அடுத்த கூட்டணி உருவாகியுள்ளது.
இமான் அண்ணாச்சி, சின்னபொண்ணு, தாமரைச்செல்வி மற்றும் ஜக்கி பெர்ரி ஆகியோர் இணைந்து கூட்டணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக அமைத்த கூட்டணியால் இதர கன்டஸ்டன்ட்ஸ் கடுப்பாகி உள்ளனர். ஏற்கனவே தாமரை செல்வியின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் வில்லி அவதாரம் எடுக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் அவர் புது கூட்டணியில் இணைந்துள்ளது சகா போட்டியாளர்களுக்கு மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இதில் பிரியங்கா தற்போது தனித்து விடப்பட்டார் என்பது தான் நிதர்சனம்.