பிக்பாஸ் வீட்டில் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் பிரியங்கா ரசித்து கேட்ட விடயம்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரு தினங்களுக்கு முன் கோலகலமாக தொடங்கியது தான் பிக்பாஸ் சீசன் 5. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியை வழக்கம் போல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் சீசன் 5-ல் ஜெர்மன், மலேசியா வாழ் தமிழ் பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதிலும் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா களமிறங்கியுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடைய மதுமிதா, தமிழ் பொழுதுப்போக்கு துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் தொகுப்பாளினி பிரியங்கா இலங்கை பெண்ணான மதுமிதாவிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். அப்போது பிரியங்கா மதுமிதாவிடம் நீங்கள் சென்னைக்கு தனியாகதான் வந்தீங்களா என கேட்டுள்ளார். அதற்கு மதுமிதா நான் கடந்த வாரம்தான் வந்தேன். நான் மட்டும்தான் வந்தேன் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை என கூறினர்.
இதனையடுத்து மதுமிதாவிடம் நீங்கள் பேசுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது என பிரியங்கா கேட்டுள்ளார். நான் தமிழ் திரைப்படங்களை பார்த்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன் அதற்கு முன் தமிழில் பேசியது இல்லை என பிரியங்காவிடம் மதுமிதா கூறியுள்ளார்.
பின்னர் பிரியங்கா நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னுடன் இப்படியே பேசுங்கள் என மதுமிதாவிடம் கூறியுள்ளார்.