பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா - தாமரை இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்!
பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்ற தலைவர் டாஸ்க் நடந்தபோது சக போட்டியாளரான தாமரைக்கு தலைவர் ஆக தகுதி இல்லையென பிரியங்கா சொல்லி மட்டம் தட்டி பேசியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தலைவர் டாஸ்கில் தாமரை தலைவர் ஆக தகுதி இல்லை என பிரியங்கா சொல்ல, அதை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என தாமரை பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான புதிய தலைவரை தேர்வு செய்ய பருத்திவீரன் என ஒரு டாஸ்க் பிக்பாஸ் கொடுத்தார். குறித்த டாஸ்கில் பெட்டியில் பஞ்சை அடைத்து கொண்டு வர வேண்டுமென இருந்தது. யாருடைய பெட்டியில் இருக்கும் பஞ்சு எடை குறைவாக இருக்கிறது என பார்த்து கடைசி இரண்டு பேர் ஓர் வட்டத்தில் நிற்க வேண்டும்.
இந்த போட்டியில் யார் வெளியே போக வேண்டும் என்பதை போட்டியில் பங்கேற்காதவர்கள் வாக்களித்து முடிவு செய்ய வேண்டும். அந்த டாஸ்கில் முதல் சுழற்சியில் போட்டியாளர்கள் தாமரை மற்றும் அபிநய் சுழற்சிகள் வந்தனர். அப்போது தாமரைக்கு எதிராக பிரியங்கா வாக்களித்தார். தாமரையிடம் உனக்கு தலைவர் ஆகும் தகுதியில்லை என பிரியங்கா காரணம் கூறினார்.
பிரியங்கா அப்படி கூறியதால் தாமரை கடும் கோபம் ஆகி பேசினார். 'நீ தலைவர் ஆகி என்ன செய்ய போற' என பிரியங்கா கேட்க, நீ என்ன சொல்லிட்டா செஞ்ச என கேட்டார். இப்படி அவர்கள் நடுவில் சண்டை பெரிதாக, நிரூப் தனது ஓட்டை மாற்றி தாமரைக்கு எதிராக போடுவதாக கூறினார்.
இதனால் தாமரை வெளியேற்றப்பட்டார். போட்டி முடிந்து அபிநய் தலைவர் ஆனார். அதன் பின் வீட்டுக்குள் வந்து பிரியங்கா சண்டையை தொடர்ந்தார். அவருக்கு தலைவர் ஆகும் தகுதி மட்டும் இல்லையாம் என நிரூப் பேசும்போது சொல்ல பிரியங்கா அது பற்றி பேசினார்.
மீண்டும் தாமரைக்கு தகுதி இல்லை என்றே பிரியங்கா கூறிக்கொண்டே இருந்தார். கடுமையான கோபத்திற்கு உள்ளான தாமரை இதை சொல்ல உங்களுக்கு தகுதியில்லை என பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.