போட்டி போட்டுக்கொண்டு சென்ற தனியார் - அரச பேருந்துகள்: அச்சத்தில் பயணித்த மக்கள்
இ.போ. சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் போட்டியிட்டு செலுத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒரு பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற முடியாமல் அச்சத்தில் பயணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை (17-02-2023) இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்துக்கு சமமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிறுத்தப்பட்ட போது ஏற்பட்ட விபத்தை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் சுமார் 40 நிமிடங்களுக்கு அதிலிருந்து வெளியேற முடியாமல் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அநுராதபுரம் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலையில் உள்ள பேருந்தும் அநுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.