சிறைச்சாலை காவலில் இருந்த கைதி திடீர் மரணம் ; தீவிரமாகும் விசாரணை
பதுளை சிறைச்சாலையின் காவலில் இருந்த கைதி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம்
போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்க நுவரெலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபர், பதுளை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பதுளை சிறைச்சாலையில் இருந்தபோது, திடீரென மயக்கமடைந்து பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.