யாழில் பயங்கர விபத்து சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில் யாழ் சிறைச்சாலை பேருந்தும் தனியார் கயஸ் வாகனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நாரந்தனை பகுதியில் இன்றையதினம் (13-05-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இருந்து யாழ் நோக்கி கைதிகளை ஏற்றி வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை பேருந்தும் ஊர்காவல்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காயஸ் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் நோக்கி பயணித்த கயஸ் வாகனம் திடீரென நிறுத்தம் முற்பட்ட போது அதிக திசையில் பின்னால் வந்த சிறைச்சாலை பேருந்து கய்ஸ் வாகனத்தில் பின்னால் மோதியுள்ளது.
விபத்தில் கயஸ் வாகனத்தில் பயனித்த ஒருவர் காயமடைந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறைசசாலை பேருந்தும் கயஸ் வாகனமும் சேதமடைந்துள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த சிறைக்கைதிகள் வேறொரு வாகனத்தில் யாழ் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.