வெளிநாட்டில் தந்தை... தாய் கண்டித்தால் விபரீத முடிவெடுத்த யாழ்ப்பாண மாணவி! பெரும் சோக சம்பவம்
யாழ்ப்பாணத்தை ச்eerந்த , நீர்கொழும்பு பகுதியில் வசித்துவரும் , கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர் கொழும்பு பகுதியில் வசித்து வரும் 16 வயதான மார்ட்டின் பிரியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி வியாபாரிமூலையை சேர்ந்த மாணவியே உயிரிழந்து:ள்ளார். உயிரிழந்த மாணவியின் தந்தை பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பரீட்சை முடிந்த மாணவி, அதிகநேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12-05-2024) மாலை உயிரை மாய்த்துள்ளார்.
மாணவியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நீர்கொழும்பு வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நீர் கொழுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.