அதிபர் நியமனத்தில் முறைகேடு; வடமாகாண ஆளுநர் செயலகத்தின் அறிவிப்பு
கிளிநொச்சி சென்திரேசா சென் திரேசா மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக சிவசேனை அமைப்பு பிரதிநிதி ஒருவரால் வட மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
இந் நிலையில் அதனை ஆராய்ந்த வடமாகாண ஆளுநர் செயலகம் குறித்த பாடசாலையின் அதிபர் நியமனம் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக தங்களால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2025.08.04 ஆம் திகதிய முறைப்பாடு சார்பாக,
குறித்த முறைப்பாடு தொடர்பான கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லுாரியின் அதிபர் நியமனம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றேன் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் சத்தியசீலன் எழுத்து மூலம் முறைப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.