நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள முக்கியஸ்தர்
இலங்கையில் நாளை அல்லது நாளை மறுதினம் நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில், தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்துடன், நிதியமைச்சர் பதவிக்கு பொறுத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நாளை அல்லது நாளை மறுதினம் நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.