11 பேருக்கு அவசர அழைப்பு விடுத்த பிரதமர் மகிந்த!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 11 கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு அறிவித்துள்ளார்.
இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி (NFF) மற்றும் பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகள், அரசாங்கத்தில் நீடிப்பதா அல்லது சுயாதீனமாக செயற்படுவதா என்பதை கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்க வேண்டும் என பதவி நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் தாம் ஒருபோதும் அமைச்சராக செயற்படமாட்டேன் எனவும் அவர் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.