பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தியான்ஜினில் 31ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் அவர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், உலக அரசியலில் அமெரிக்கா-இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மற்றும் சீனா-ரஷ்யா கூட்டணி வலுப்படுதல், மாநாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை ஒரு 'உரையாடல் பங்குதாரர்' என்ற நிலையில் உள்ளது. இலங்கையின் பாரம்பரிய அணிசேராக் கொள்கை, தற்போதைய உலக ஒழுங்கில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது.