பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனுக்கு பயணம்
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403-ல் மூலமாக நாட்டிலிருந்து புறப்பட்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சுதந்திர நாடுகளின் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் ஐக்கிய இராச்சியத்திற்குப் சென்றுள்ளார்.

பிரதமர் இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவினர் உடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிகரமான இந்தப் பயணத்தின் பின்னர் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் மே 23 அன்று நாடு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.