சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன
பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நேற்று(14) மாலை சீனாவிற்கு பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் 7 ஆவது சீன – தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27 ஆவது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் பிரதம அதிதியாக பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து இந்த கண்காட்சியை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெறவுள்ள கண்காட்சி
சீனாவின் குன்மிங் நகரில் நாளை (16) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளும் பிராந்திய பொருளாதார பங்குடைமை அமைப்பின் உறுப்பு நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோரும் சீனாவிற்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.