பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம்!
நாட்டில் பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பிற பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதேவேளை சமையல் எரிவாயுவின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இந் நிலையில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.