இலங்கையில் எகிறிய ஸ்மார்ட் போன்களின் விலை!
இலங்கையில் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாடுகள் காரணமாக சில பொருட்களின் விலைகள் 40 வீதம்வரை அதிகரித்திருப்பதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கடன் பத்திரத்தின் ஊடாக செய்யப்பட்ட விற்பனைகள்கூட இந்தக் கட்டுப்பாட்டிற்குப் பின்னர் பணக்கொடுப்பனவுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல டொலர் நெருக்கடிக்கு மத்தியில் சந்தையில் சில பொருட்களின் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே இரண்டரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சில பெறுமதியான ஸ்மார்ட் தொலைபேசிகள் தற்போது சந்தையில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை எட்டியிருப்பதாக கூறப்படுகின்றது.