வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டிய தேசிக்காய் விலை
இலங்கையில் ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை எட்டியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து வருகின்றது.
சில்லறை விலை
இந்நிலையில், நேற்றையதினம் ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தால் இந்த நாள்களில் தேசிக்காயின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் எகிறியுள்ளன என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டனர்.
அதேவேளை எதிர்வரும் நாட்களில் தேசிக்காயின் விலை 5000 ரூபா வரை எட்டக்கூடிய நிலை காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.