ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு!
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (9) வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கை
அதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது