தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைந்து ருமேஷ் தரங்க நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விளையாட்டுத் துறையின் மிக உயர்ந்த சாதனையான ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் பயணத்தில் அனைத்து இலங்கையர்களும் வெற்றிபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச வெற்றியை நோக்கமாகக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முழு ஆதரவு அளிக்கத் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.