மகிந்தானந்தவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்தானந்த அளுத்கமகேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரசாயன உரங்கள் குறித்து தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அவரெ பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சுமத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விவசாய அமைச்சரின் செயலாளராகக் கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை பதவியிலிருந்து விலக்க விவசாய அமைச்சருக்கு இருந்த விருப்பத்தை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் இரசாயன உரத் திட்டத்தை சுமேதரவுடன் செய்ய முடியாது என்று மஹிந்தானந்தா ஜனாதிபதியிடம் பலமுறை கூறியுள்ளதாகவும், மஹிந்தானந்தாவுக்கு பழக்கப்பட்ட நபரை அதில் இணைத்துக் கொள்ள விரும்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
இறுதியில், ஜனாதிபதி மஹிந்தானந்தாவின் வார்த்தைகளிலிருந்து தப்பிக்க முடியாத இடத்தில் சுமேதவை நீக்கி, மஹிந்தானந்த விரும்பும் நபருக்கு அனுமதித்தார். நியமிக்கப்பட்ட உடனேயே, "இது ஒரு எளிய வியம், ஐயா என மஹிந்தானந்தாவின் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குத் தேவையான இயற்கை உரத்தை 100% உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் பெருமை பேசினார்கள். ஆனால் உரம் நெருக்கடி தொடரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததால், மஹிந்தானந்தாவும் அவரது செயலாளரும் நாட்டின் உரத் தேவையில் 25 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினர்.
இதனையடுத்து ஜனாதிபதி இறுதியாக மஹிந்தானந் தாவிடம் உரையாற்றியபோது ,
நீங்கள் சொன்னீர்கள் தானே சுமேதவுடன் இந்த வேலை யைச் செய்ய முடியாது என்று அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் இப்போது அவரை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் நீங்கள் வேலையைச் சரியாகச் செய்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னேன் தானே இந்த வேலைக்கு அனுபவங்கள் உள்ளவர்களை இணைத்துக்கொண்டு வேலையை ஆரம்பிக்குமாறு ஆனால், உங்களுக்கு இன்னும் இந்த வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றும் சாடியுள்ளார்.
அதோடு இது குறித்து மீண்டும் என்னைப் பேச வைக்கவேண்டாம் என்றும் தயவுசெய்து இந்த வேலையைச் சரியாகச் செய்யுங்கள். இல்லையெனில், தான் ஒரு முடிவை எடுக்க வேண்டி யிருக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய , மகிந்தானந்த அளுத்கமகேவை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.