மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஜனாதிபதியின் கோரிக்கை
நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள மின்சாரப் பயன்பாட்டு நிலவரத்தை கருத்திற்கொண்டு, மின்சார வாகனங்களை மதிய நேரங்களில் மின்னேற்றம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிவிக்கையில், தினமும் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரத்திற்கான கேள்வி மிக அதிகமாகக் காணப்படுகிறது. மாலை வேளைகளில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதன் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 300 மெகாவாட் மேலதிக சுமை ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி
பகல் நேரங்களில் சூரிய சக்தி உள்ளிட்ட புனர்நிர்மாணிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி வாகனங்களை மின்னேற்றம் செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.