ஜனாதிபதி ரணில் பாதுகாப்புப் பிரிவினருக்கு விடுத்த அதிரடி உத்தரவு
சமீப காலமாக பாரியளவில் பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (13-12-2022) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வகையில், கடுமையயான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.