மஹிந்தவுக்கு ரூபாய் கொடுத்த ஜனாதிபதி ரணில்!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வசித்து வரும் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை பத்திரம் மூலம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது,கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மகிந்த ராஜபக்ச வசித்து வரும் இல்லத்தை மாத்திரமின்றி, புதிய வீடமைப்பு தொகுதி ஒன்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேசமயம் அந்த இல்லம் புனரமைக்கப்படும் வரை மகிந்த ராஜபக்ச உட்பட குடும்பத்தினர் கொழும்பு புல்லரஸ் வீதியில் உள்ள வேறு ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிப்பார்கள் என கூறப்படுகிறது.
இதன்போது நிதி நெருக்கடி காரணமாக அதனை முன்னாள் ஜனாதிபதி நிறைவேற்றதால நிலையில் தற்போது ரணில் அதனை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.