ADB ஆளுநர்கள் குழுவின் தலைவராக ஜனாதிபதி ரணில்!
இலங்கையில் நடைபெறவிருந்த 55ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) வருடாந்த ஆளுநர் கூட்டம், க பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சமூக பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமாகும் (ADB) வருடாந்த நிகழ்வு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.
அதேசமயம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் தலைவரை இந்த ஆண்டு இலங்கை பெறும் என்பதுடன் அடுத்த இரண்டு வருடங்களில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் இது நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.