உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அதிகாரி ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அது தொடர்பான வழக்குகளில் அரசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2009-ஆம் ஆண்டில் இடம்பெற்ற சில குற்றங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "இந்தச் சம்பவங்களை முழுமையாக விசாரிக்கக் காலம் எடுக்கும்.
ஆனால், நாங்கள் அதைச் செய்வோம்," என உறுதியளித்தார்.
பத்து ஊழல் வழக்குகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய ஐந்து குற்றவியல் வழக்குகள் உட்பட 15 முக்கிய வழக்குகள் இந்த மாதம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.