நாட்டை மூடுவது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை!
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பல்வேறு தரப்பினரும் நாட்டை ஒருவாரத்திற்காவது மூடும்படி கோரிக்கை முன்வைத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அவ்வாறு பொதுமுடக்கம் ஒன்றை அறிவித்தால் அன்றாடம் வருமானம் பெற்றுவருவோர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் நாட்டை மூடுவதற்கான தீர்மானத்தை பெரும்பாலும் ஜனாதிபதி எடுக்கமாட்டார் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தனது முடிவினை ஜனாதிபதி கோட்டாபய இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
இந்நிலையில் நாளை காலையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெறவுள்ள ஜனாதிபதி, தனது முடிவிற்கான விளக்கத்தையும் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.