ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் 76வது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கோட்டாபய உரையாற்ற உள்ளார்.
அத்துடன் மனித உரிமைகளை பாதுகாத்தல் கொவிட் வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலை என்பன பற்றியும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இன்று உரையாற்றவுள்ளார்.
இதன் போது மனித சமூகத்தின் நிலையான இருப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றி கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தொடரின் போது ஆராயப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.