இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு!
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
This is the time for all Sri Lankans to join hands as one, to overcome the economic, social & political challenges.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 11, 2022
I urge all #Srilankans to reject the subversive attempts to push you towards racial & religious disharmony. Promoting moderation, toleration & coexistence is vital.
“ பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது.
இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.