பொசன் போயா தின நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பொசொன் தினத்துடன் இணைந்ததாக, தந்திரிமலை ரஜமகா விகாரையில் நடைபெறும் ஆலோக பூஜையில் (ஒளி விளக்கேற்றும் நிகழ்வு) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
தந்திரிமலை ரஜமகா விகாரைக்கு இன்று (29)பிற்பகல் வருகை தந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி மின் விளக்குகளை ஏற்றி ஆலோக பூஜையை ஆரம்பித்து வைத்தார்.

ஆலோக பூஜை
தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதம சங்கநாயக்கர் தந்திரிமலே சந்தரதன நாயக்க தேரரின் அனுசாசனத்துடன் இந்த ஆலோக பூஜை நடத்தப்படுகிறது.

இதனுடன் இணைந்ததாக மலர் விளக்கு பெரஹரா மற்றும் பௌத்த பக்தி கீத நிகழ்ச்சியும் இங்கு நடத்தப்பட்டது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணாயக்கார உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.