யாழில் மக்களை கட்டியணைத்த ஜனாதிபதி அனுர; மகிழ்ச்சியில் தாய்மார்!
யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வல்வெட்டித்துறைக்கு சென்று மக்களை சந்தித்தார்.
இதன்போது, வயோதிப தாய்மார் ஜனாதிபதியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் , சமூகவலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வடக்கில் நிலவும் காணி பிரச்சினை
யாழ்ப்பாண விஜயத்தின்போது , யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்போது மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்றும், வடக்கில் நிலவும் காணி பிரச்சினை குறித்து மீளாய்வு நடத்தப்பட்டு, விரைவில் காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜா பூதவுடலுக்கு நேரில் சென்று ஜனாதிபதி அனுரகுமார அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.