முல்லைத்தீவில் ஜனாதிபதி அனுரவின் செயல்; வைரலாகும் காணொளி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கான விஜயத்தின்போது யாழ்ப்பாணத்தில் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலக திறப்பு மற்றும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்றதுடன் கச்சத்தீவுக்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
வடக்கிற்கான விஜயத்தின்போது ஜனாதிபதி அனுர , நேற்று முன் தினம் (2) முல்லைத்தீவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு அவர் குழந்தை ஒன்றுடன் எடுத்துக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கொஞ்சி விளையாடும் காணொளி
முல்லைத்தீவுக்கான விஜயத்தில் ஜனாதிபதி அனுர, வட்டுவாகல் பால புனரைப்பு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி என்கிற ஆடம்பரமின்றி மிகவும் எளிமையாக குழந்தையுடன் அவர் கொஞ்சி விளையாடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.