ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அபிவிருத்தி கருத்திட்ட பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
புதன்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்ட செயலக (பழைய) காரியாலயத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

முழு நாடும் ஒன்றாக..
அதனைத்தொடர்ந்து பகல் 01.30 மணிக்கு மட்டக்களப்பு பேவர் மைதானத்தில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்புக்கான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்ட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்துக்கு அருகில் ' நிந்தவூர் கலாசார மத்திய நிலையம்' நிர்மாணிப்புக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு அம்பாறை நகரத்தில் புதிய கடைத்தொகுதி நிர்மாணிப்புக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலக காரியாலயத்தில் நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.