கச்சதீவு வேண்டும்; கர்ஜித்த விஜய்க்கு பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுரகுமார!
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை (Katchatheevu) மத்திய அரசு மீட்க வேண்டும் என மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு ஜனாதிபதி அனுர குமார பதிலடி கொடுத்துள்ளார்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்டுதருமாறு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு , இலங்கையில் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்திருந்தது.
கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாப்பேன்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், “தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், ஈழத் தமிழ் மீனவர் அமைப்பினர் உட்பட பலரும் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சமூகவலைத்தளங்களிலும் கச்சதீவு விவகாரம் பேசுபொருளானது.
இந்நிலையில் இன்றயதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுர குமார , மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதன்போது உறையாற்றிய ஜனாதிபதி,
கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என தெரிவித்தார்.