அமெரிக்காவில் ஜனாதிபதி அநுரகுமார - ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
அமெரிக்காவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐ. நா. சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார்.
ஐ. நா. சபை அமர்வில் ஜனாதிபதி அநுர உரை
அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டோரினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.
இந்நிலையில்,வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.