டெல்லியில் பல்வேறு தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார
இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களையும் இன்று சந்தித்தார்.
இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று (19) பிற்பகல் நடைபெற்றது.

அதோடு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனையும் (Emmanuel Macron) ஜனாதிபதி சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை நடைபெற்றது.

