உயிரிழந்தவரின் காணிக்கு கள்ள உறுதி; யாழில் சட்டத்தரணியின் தில்லாலங்கடி வேலை அம்பலம்!
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து, காணி விற்பனை செய்து மோசடியில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த 1988ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
மோசடி ஆவணங்கள்
இந்நிலையில் அவரது காணியை 2021ஆம் ஆண்டு உரிமையாளரால் ( உயிரிழந்தவர்) விற்கப்படுவது போன்று மோசடி ஆவணங்களை தயார் செய்து காணி 15 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் உறுதி எழுதிய சட்டத்தரணி, சாட்சி கையொப்பம் இட்டவர்கள் என சம்பவத்துடன் தொடர்ப்புடைய ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சில வாரங்களுக்கு முன்னரும் உயிரிழந்தவரின் பெயரில் உறுதி முடித்து, காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.