அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் முதற்கட்ட அறிக்கை
அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்வைத்த சமர்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கமைய, சிறுமியின் சடலத்துக்கான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.
சிறுமியின் மரணம் தொடர்பில் பண்டாரகமை பொலிஸ் முதற்கட்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை பொலிஸ் தெரிவித்துள்ளது.
சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் பல்வேறுப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டு ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.