17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர்.

விசாரணை
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் பொலிசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது. அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்து இருவரும் இளம் பெண்ணின் வற்புறுதலின் பேரில் தகாத உறவிலிருந்துள்ளனர்.
இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது பொலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.