சரிகமப மேடையில் சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான்; சோக கதை கேட்டு கண்கலங்கிய அரங்கம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் 5-ன் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈழத்தை பூர்வீகமாக கொண்டும், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தும், எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் பிரஷான் .
10 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை விட்டு அகதியாக சுவிசில் வாழ்ந்தாலும், இன்னும் சுவிஸ் குடியுரிமை கிடைக்காத நிலையில்தான் இருக்கின்றனர் பிரஷான் குடும்பத்தினர்.
சாதனைகளுக்கு எல்லை இல்லை
சாதனைகளுக்கு எல்லை இல்லையென்று நிரூபிக்கும் வகையில், தனது இசை திறமையால் இந்தியா வரை வந்து ஒரு ரியாலிட்டி மேடையை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
பிரஷான் தற்போது 30 நாள் விசாவில் இந்தியாவுக்கு வந்து சரிகமப மேடையில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில், தனது உணர்வுபூர்வமான பாடல் மூலம் நடுவர்களின் இதயத்தையும், அரங்கில் இருந்தவர்களின் மனதையும் உருக்கவைத்து, நேரடியாக கோல்டன் வெற்றியையும் பெற்றிருக்கிறார் பிரஷான்.
எனக்குத் தெரிந்தது இசை மட்டும்தான்… என் மனதில் ஏற்படும் கஷ்டங்களை எல்லாம் பாடலின் வழியாக வெளிக்கொணர்வதுதான் என் வழி என தனது வாழ்க்கை பற்றி கண்கலங்கி கூறியுள்ளார்.
அதோடு கடந்த வருடமும் இதே நிகழ்ச்சியில் தேர்வாகினேன், ஆனால் விசா பிரச்சனையால் தொடர முடியவில்லை. இந்த வருடமும் இதே நிலைதான்… ஜூன் 3க்குள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என கண்கலங்கினார்.
கண்கலங்ககிய டி ராஜேந்தர்
இந்நிலையில் பிரஷான் கதையை கேட்டு சிறப்பு விருந்தினராக வந்து டி ராஜேந்தர் கண்கலங்ககியபடி, பிரஷானை கட்டி அணைத்து,
“வாழ்க்கையுடைய நிலைமையை பார்க்கும்போது மனசு ரொம்ப பாரம் ஆயிடுச்சு. ஆனா ஒன்னு ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு தினத்திற்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்து இருக்கிறான்.
அந்தக் கணக்கை எல்லாம் மீறி நம்மால் எதுவும் பண்ண முடியாது. ஜூன் 3ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு போகணும் என்று சொல்லி இருக்கிறாய் பிரஷான் நீ விமானத்தில் பறக்கலாம்.
ஆனால் இந்த சரிகமபவின் சங்கீத குடும்பம் உன்னை மறக்காது. எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் உண்மை சுமக்கிறோம் என்றும் வாழ்க பல்லாண்டு” என்று வாழ்த்துகிறார். உனக்குன்னு ஒரு அடையாளம் இல்லை என்று நினைக்காதே.
இனி இசை கலைஞர் என்பதுதான் உன்னுடைய அடையாளம். இந்த சரிகமப நிகழ்ச்சி உனக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றும் ராஜேந்தர் உட்பட நடுவர்களும் பிரஷான்னை வாழ்த்தி இருக்கிறார்கள்.