சக மாணவிகளிடம் சேட்டை; தட்டிக்கேட்ட பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில்!
நாவலப்பிட்டிய நகரிலுள்ள பிரபல தமிழ் மொழிமூல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள்மீது குழுவொன்று மூர்க்கத்தனமான தாக்குதlஐ மேற்கொண்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் குழு மாணவிகளிடம் சேட்டை
மேற்குறிப்பிட்ட பாடசாலையில் பயிலும் மாணவிகளுக்கு இளைஞர் குழு ஒன்று தொலைபேசி இலங்கங்களை வலுக்கட்டாயமாக கொடுத்து தினமும் சேட்டைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இதனால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உள்ளாகி வருவதனை அவதானித்த சக வகுப்பு மாணவர்கள் சேட்டைகளில் ஈடுபடும் இளைஞர்களை கண்டித்தமையே மாணவர்கள் மீதான தாககுதலுக்கு காரணமென கூறப்படுகின்றது.

மேற்படி பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவிவந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த 6 ஆம் திகதி காயமுற்ற மாணவர்களில் ஒருவனின் வீட்டுக்கு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குறித்த மாணவனைத் தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன் போது நடந்த கைகலப்பில் மோட்டார் .சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர் பின்னர் 7 ஆம் திகதியும் இரு மாணவர்களை மேற்குறிப்பிட்ட குழுவினர் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதல்
இதனையடுத்து நேற்று முன்தினமும் (08) பாடசாலை முடிந்து 1.30.மணியளவில் வீடு நோக்கி சென்ற மூன்று மாணவர்களையும் ஐந்து பேரடங்கிய குழு கடை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது தடுக்கச்சென்ற மாணவன் ஒருவனின் சகோதர் உட்பட தாக்குதல் மேற்கொண்ட மூவர் அடங்களாக ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து இரு தரப்பிலும் இருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.