விடுதலைப்புகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் கௌதமன்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழக திரைப்பட இயக்குநர் கௌதமன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தினம் நினைவேந்தப்படவுள்ள நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
துவாரகா பிரபாகரன் அலைப்பேசியில் பேசினார்
கடந்த 2009ம் ஆண்டு இறுதிகட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் 'பிரபாகரன்' இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் , கடந்த பிப்ரவரி மாதம், "பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார். அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு இதை தெரிவித்துக்கொள்கிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரின் மனைவி மதிவதனியும், மகள் துவாரகாவும் நலமுடன் இருக்கிறார்கள்” என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநருமான கெளதமன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் கூறுகையில்,
"பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன், என்னிடம் அலைப்பேசியில் பேசினார், அப்போது பிரபாகரன் குறித்தும் வினவினேன்.
அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு, அப்பாவும், அம்மாவும் நலமுடன் இருக்கிறார் அதோடு , மாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதி (இன்று) மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்திய மத்திய, மாநில அரசாங்கங்கள் துவாரகாவின் வருகையை வரவேற்க வேண்டும் என்று இயக்குனர் கௌதமன் கூறியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.