அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் கையளிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) தனது அதிகாரங்களை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் (kamala Harris) கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுகயீனம் காரணமாக ஜோ பைடன், (Joe Biden) சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றும் இதே முதல் சந்தர்ப்பமாகும்.1
அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் கமலா ஹரிஸ் ஆவார்.
இதையடுத்து, துணை ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கமலா ஹரிஸ் (Kamala Harris) முழுமையான அதிகாரத்தை ஏற்றுக்கொள்வார், இதில் அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் அணு ஆயுதம் மீதான கட்டுப்பாடு அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.