போர் சூழல் தீவிரமடைந்தால் மின் விநியோகம் பாதிக்கப்படலாம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

Power cut Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Nalinda Jayatissa
By Viro Mar 17, 2026 08:07 PM GMT
Report

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து எரிபொருள் மற்றும் நிலக்கரி விநியோகம் முற்றாகத் தடைப்பட்டால், நாட்டில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது சவாலாக அமையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலையில் மின் துண்டிப்பு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போர் சூழல் தீவிரமடைந்தால் மின் விநியோகம் பாதிக்கப்படலாம் ; நளிந்த ஜயதிஸ்ஸ | Power Supply May Be Affected

 நிலக்கரி கப்பல்கள்

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் மாத இடைப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாகவே 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி அவசர கொள்வனவு செய்யப்படவுள்ளது.

நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. எவ்வாறிருப்பினும் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரம் எமது உணவு தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி

ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி

கப்பல் போக்குவரத்தின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படும். திருகோணமலை எண்ணெய் குதங்களை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் எமது எரிபொருள் களஞ்சிய திறனும் அதிகரிக்கப்படும்.

தற்போது மின் துண்டிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை. எனினும் போர் சூழல் விரிவடையும் தன்மையின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அமெரிக்க - ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து, எரிபொருள், நிலக்கரி விநியோகம் முற்றாக தடைபட்டால் 24 மணித்தியால தடையற்ற மின் விநியோகம் குறித்து எவராலும் எதிர்வுகூற முடியாது என்றார். 

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ; ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ; ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US