வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் தொழிற்சங்கம்
தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்கள் தபால் சேவையில் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து தபால் மா அதிபருடன் விவாதித்ததாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டதாகவும், அதன்படி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.