லொஸ்லியான தொடர்பில் வெளியான பதிவு!
இலங்கைப் பெண்ணான லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஓர் இடத்தை பிடித்து இன்று மிகவும் பிரபல்யமான ஒருவராக வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார்.
இதற்காக லொஸ்லியா பாராட்டுபவர்கள் பலரும் உள்ளனர். அதேசமயம் எதிர்மறை கருத்துக்களை கூறுபவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் லொஸ்லியா தொடர்பில் முகநூல் வாசியொருவர் பதிவிட்டுள்ளதாவது,
லொஸ்லியாவின் படத்தை எந்த ஊடகம் வெளியிட்டாலும், இலங்கை தமிழ் ஆண்கள் 98% ஆனவர்களின் கருத்து அந்த பெண் தவறான நடத்தை உடையவள் அதனால் தான் இந்தியாவரை சென்று பிரபல்யமாகியிருக்கிறாள் என்பதுதான்.
இப்படி கதைப்பது ஒரு ஆரோக்கியமான மனநிலைதானா.?என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் அவளிடம் இருக்கும் ஏதே ஒரு திறமையால் முன்னுக்கு வருகின்ற போது அதை ஏற்க கூடிய மனம் எம்மிடம் இல்லை என்றால் சம்மந்தபட்டவர்களின்வளர்ப்பிலும் பார்க்கும் கண்ணேட்டத்திலும் கெட்ட சிந்தைனைகளிலுமே பிழைகள் இருக்கின்றன.
நாளைக்கு உங்களுடைய வீட்டில் ஒரு அழகான அக்காவோ தங்கையோ அல்லது உங்கள் அழகான பெண் குழந்தகை்கோ தீடிரென ஒரு வாய்ப்பு அவர்களின் அழகின் காரணமாக வந்து அவளும் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் இப்படி அசிங்கமாக மற்றவர்கள் வார்த்தைகளால் எழுதும் போது சம்மந்தபட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
சரி உங்கள் தீர்க்க தரிசனமான கருத்துபடி ஒரு பெண் தனக்கு பிடித்த ஒரு பிரபலமான ஆணுடன் ஒரு தொடர்பை பேணி அதன் மூலம் முன்னுக்கு வந்தால் கூட அது சம்மந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் தானே.
அதில் மூக்கை நுழைத்து கருத்துக்களை கக்குவது தான் நாகரீகமா ? அப்படி கருத்துக்களை கக்கி விட்டால் உங்களை யாரும் அறிவாளி என்று கொண்டாடுவார்களா ? யாரோ ஒரு பெண்ணின் தவறான நடத்தையால் உங்கள் வீட்டில் சோறு அவியாமல் போய்விடுமா ..? இல்லை பெரிய வருமான இழப்பு வந்து விடுமா/ இல்லை தானே.
உண்மையில் அடி நுனி தெரியாமல் தவறான கருத்துக்களை பதிவிடுவது என்பது ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் சம்மந்தப்பட்ட விடயம். அதாவது அந்த சான்ஸ் தனக்கு கிடைக்கவில்லையே என்கின்ற இயலாமையின் வெளிப்பாடே இந்த தவறான கருத்துக்கள் வெளிவர காரணமாகின்றன.
வக்கிர எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்டவர்கள் வாழ்வில் ஏற்றத்தை காண முடியாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.