இலங்கையில் மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க சாத்தியம்
மின்சார கட்டணத்தை 30% குறைக்க வாய்ப்பு உள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க கூறுகையில்,
மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருப்பதன் காரணமாக நீர்மின் உற்பத்தியும் தற்போது உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் 10 முதல் 20 வீதம் வரை மின்சார கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை முன்வைத்த யோசனைக்கு எதிர் பிரேரணை ஒன்றையும் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், அது தொடர்பில் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்க இன்று முதல் பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.