40 தொன் ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சக்தி
இலங்கை கடற்படைக் கப்பலான சக்தி இந்தியாவிலிருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை சுமந்தவாறு இன்று(23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் இறக்கியவுடன் கப்பல் நாளை மீண்டும் மற்றுமொரு தொகுதி மருத்துவ ஒட்சிசனைக் கொண்டுவர சென்னை துறைமுகம் நோக்கிப் பயணிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கை கடற்படை சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய கடற்படை சார்பில் ‘ஐ.என்.எஸ் சக்தி’ என்ற கப்பல் மூலம் 100 மெட்ரிக் தொன் மருத்துவ ஒட்சிசன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய அக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.