பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்
பிரபல பாடகியான மரியசெல் குணதிலக்க தனது 68 ஆவது வயதில் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
திடீர் நோய் நிலைமையினால் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் அதிகாலை அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கிரியைகள்
இலங்கையின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான இவரது "கண்டி லமிஸ்ஸி" உட்பட பல பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சிங்களம், ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடி, இலங்கையிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையேயும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.