பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்பாடு
புத்தளம் முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர் திருட்டில் ஈடுபடுள்ள மாணவர்கள்
முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை விசாரணையில் வெளியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பாடசாலை மாணவர்களின் இச்செயல் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.