பண்டிகை தினத்தில் பூநகரியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்! 6 பேர் வைத்தியசாலையில்
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் நேற்றிரவு (15-01-2023) மது போதையால் பயணித்த குழு ஒன்று பூநகரி வெட்டுக்காடு மற்றும் புநகரி பள்ளிக்குடா பகுதியிலும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் வாள்வெட்டுச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் 6 பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இது போன்று பல பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தமது அன்றாட கடமைகளை முன்னேடுக்க முடியாதவாறு அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.